அண்ணா நகரில் போதையில் போலீஸ் நிலையத்தில் நுழைந்து வடமாநில பெண்கள் ரகளை

அண்ணா நகரில் மதுபோதையில் போலீஸ் நிலையத்தில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட வடமாநில பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா நகரில் போதையில் போலீஸ் நிலையத்தில் நுழைந்து வடமாநில பெண்கள் ரகளை
Published on

மதுபோதையில் இளம்பெண்கள்

அண்ணா நகர், 6-வது அவென்யூவில் உள்ள தனியாருக்கு சொந்தமான மதுபான பாரில் நேற்று முன்தினம் இரவு வடமாநிலத்தை சேர்ந்த 2 இளம் பெண்கள் மது அருந்தி உள்ளனர். அளவுக்கு அதிகமாக போதையில் இருந்த பெண்கள் நள்ளிரவு பாரில் இருந்து வெளியேற மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை வலுக்கட்டாயமாக பார் ஊழியர்கள் வெளியே விரட்டியுள்ளனர். இதனால் அத்திரமடைந்த வடமாநில பெண்கள் சாலையில் சத்தம் போட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை எச்சரித்து ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண்கள் வீட்டிற்கு செல்லாமல் அருகில் இருந்த அண்ணா நகர் காவல் நிலைத்திற்குள் நள்ளிரவில் நுழைந்துள்ளனர்.

போலீசார் எச்சரிக்கை

பின் அங்கிருந்த போலீசாரிடம் பார் மீது புகார் அளிக்க வேண்டும் என போதையில் கூச்சலிட்டனர். போலீசார் அவர்களை விசாரிக்க முயன்ற போது தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த பொருட்களை தூக்கி வீசி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

விசாரணையில், அவர்கள் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 24 வயதுக்குட்பட்ட பெண்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் செல்போனில் இருந்து சூளைமேட்டை சேர்ந்த பெண்னை அழைத்து அவரிடம் போதையில் இருந்த பெண்களை ஒப்படைத்தனர். பின் நேற்று காலை அவர்களை வரவழைத்து எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com