பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது 10 பேருடன் வந்த போதை கும்பல் தாக்குதல் - சசிகலா வேதனை

தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது 10 பேருடன் வந்த போதை கும்பல் தாக்குதல் -  சசிகலா வேதனை
Published on

சென்னை,

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும்வரை சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க இயலாது என சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

போதை கும்பல் தாக்குதல்

தூத்துக்குடி-ராமேஸ்வரம் சாலையில் கீழ அரசடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கை, 10 பேருடன் வந்த கஞ்சா, மது போதை கும்பல் கட்டை மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அங்குள்ள ஊழியர்களை தாக்கியிருப்பதாக வரும் செய்திகள் மிகவும் வேதனையளிக்கிறது.

மக்களை அச்சுறுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

போதை பொருட்களை தடுக்க வேண்டும்

பெட்ரோல் பங்க் அருகே சிறுநீர் கழித்தவர்களை தட்டிக்கேட்டதற்காக இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும்வரை சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க இயலாது.

எனவே, தமிழக மக்களின் பாதுகாப்பையும், இளம் சமுதாயத்தினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

கடுமையான நடவடிக்கை

தூத்துக்குடி ராமேஸ்வரம் சாலையில் கீழ அரசடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கை தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com