குடிப்பழக்கத்தால் நடந்த விபரீதம்: இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை - கணவர் கைது

இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஆலங்குளம்,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கருவந்தா கீழத்தெருவை சேர்ந்தவர் செல்லகணேஷ் மகன் சுரேஷ் (வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு சிவனம்மாள் (30) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று இரவு வழக்கம்போல் சுரேஷ்மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த சுரேஷ் வீட்டில் கிடந்த அரிவாளால் சிவனம்மாளின் கழுத்தை கொடூரமாக அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் சிவனம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஊத்துமலை போலீசார், சிவனம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த சுரேசை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்திவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com