தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்குப் பருவமழை முடிவடையாத நிலையில், தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 28.12.2020 அன்று தென் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

டிசம்பர் 24, 25ஆம் தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்'.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com