வறண்டு வரும் நீர்நிலைகள்... திருச்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொள்ளிடத்தில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வறண்டு வரும் நீர்நிலைகள்... திருச்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
Published on

திருச்சி,

காவிரி ஆறு

தென்னிந்தியாவின் ஜீவநதியான காவிரி ஆறு கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகி சுமார் 800 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கடலில் கலக் கிறது. காவிரி ஆறு கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களில் வேளாண் உற்பத்திக்கு பெரும் பங்காற்றி வருவதுடன், இருமாநி லங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

கர்நாடகாவில் இருந்து ஓகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வரும் காவிரி ஆறு மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்துக்காக திறந்து விடப்படுகிறது. அவ்வாறு திறந்துவிடப்படும் காவிரி நீரானது பல் வேறு மாவட்டங்களிலும் பாய்ந்து சென்று திருச்சி முக்கொம்பு அருகே காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளைவாய்க்கால்கள் என 3 ஆக பிரிந்து செல்கிறது. காவிரி நதி பாய்ந்து செல்கிற மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் காவிரியில் இருந்து தான் குழாய்கள் மூலம் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது.

வறண்டு காட்சி அளிக்கிறது

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம், கம்பரசம்பேட்டை, ஸ்ரீரங்கம் என காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் மூலம் கொண்டு செல்லப்படு கிற காவிரி நீரால் திருச்சி மாநகரம், புறநகர் பகுதிகள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், அரியலூர் என பல்வேறு மாவட் டங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.

இந்தநிலையில் சமீபகாலமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் போதியஅளவு தண்ணீர் திறக்காததால் திருச்சியின் முக் கிய குடிநீர் ஆதாரங்களான காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் முற்றி லும் வறண்டு பாலைவனம்போல் காட்சி அளிக்கிறது. அகண்ட காவிரி என்று அழைக்கப்படும் காவிரி ஆறு எங்குப்பார்த்தாலும் தண்ணீரின்றி வறண்ட காவிரியாக மாறி வருகிறது.

குடிநீர் தேவை உயர்ந்தது

காவிரி எங்கும் தண்ணீரின்றி வறண்டு மணற்திட்டாக காட்சி அளிப்பதால் திருச்சிக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதிய மழை இல்லாததால் காவிரி ஆறு மட்டுமின்றி திருச்சியில் உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளும் வறண்டுபோய் உள்ளன. திருச்சி மாந கரில் கடந்த சில ஆண்டுகளில் குடிநீர் தேவை 135 முதல் 150 எம்.எல்.டி. என்ற அளவில் இருந்து கணிசமாக அதிகரித்தது. ஆனால் ஜூலை மாத நிலவரப்படி, நகரின் குடிநீர் தேவை மேலும் உயர்ந்து 165 எம்.எல்.டி. ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

குடிநீர் தேவைக்காக மேட்டூரிலிருந்து காவிரி ஆற்றில் 1,003 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டாலும், நகரின் நீர் ஆதாரங்கள் அமைந்துள்ள இடத்திற் குக் கீழே உள்ள முக்கொம்பில் அதில் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவே வந்து சேர்கிறது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் உள்ள 9 முக்கிய நீர் ஆதாரங் கள் மூலம் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, நகரில் உள்ள 129 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 5 மாதங்களாக மேட்டூர் அணையிலிருந்து முக்கொம்பு தடுப்ப ணைக்குக் காவிரி நீர் வரத்து குறைந்திருப்பதும், சேகரிப்பு கிணற்றில் போதிய நீர் இருப்பு இல்லாததும் குடிநீர் வினியோகத்தில் தினசரி 15 எம்.எல்.டி. அளவு குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளன. நகரின் குடிநீர் தேவையில் சுமார் 60 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. குடிநீர் வினியோகத்தில் கடும் பற்றாக்குறை நிலவுவதால், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதை திருச்சி மாநகராட்சி ஒத்திவைக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த திட்டத்துக்காக 100 கி.மீ. நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு சில பகுதிகளில் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டிருந்தாலும், குடிநீர் இருப்பு குறைவாக உள்ள நிலையில் இத்திட்டத்தைச் செயல்படுத் துவது ஒட்டுமொத்த நீர் வினியோகக் கட்டமைப்பிலும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com