அதிமுகவுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என நீதிமன்றத்தில் மனு செய்து விலகி கொண்டவர் டிடிவி தினகரன் - அமைச்சர் சி.வி.சண்முகம்

அதிமுகவுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என நீதிமன்றத்தில் மனு செய்து விலகி கொண்டவர் டிடிவி தினகரன் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என நீதிமன்றத்தில் மனு செய்து விலகி கொண்டவர் டிடிவி தினகரன் - அமைச்சர் சி.வி.சண்முகம்
Published on

சென்னை,

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டிஜிபியிடம் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், அதிமுக மூத்த நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர்.அமைச்சர்களுடன், கே.பி.முனுசாமி, மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் மனு அளித்தனர்.

அதன் பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2017 நவம்பரில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகதான், உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. அதிமுகவுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என நீதிமன்றத்தில் மனு செய்து விலகி கொண்டவர் டிடிவி தினகரன் என்று கூறினார்.

சசிகலா தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்குமேல் சசிகலா ஐநா சபையில்தான் முறையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com