ஒற்றைத் தலைமையை உறுதி செய்ய இரட்டைத் தலைமை ஒன்று சேர வேண்டும் - வைகைச் செல்வன் டுவீட்

ஒற்றைத் தலைமையை உறுதி செய்ய இரட்டைத் தலைமை ஒன்று சேர வேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்து உள்ளார்.
ஒற்றைத் தலைமையை உறுதி செய்ய இரட்டைத் தலைமை ஒன்று சேர வேண்டும் - வைகைச் செல்வன் டுவீட்
Published on

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், ஒற்றைத் தலைமையை உறுதி செய்ய இரட்டைத் தலைமை ஒன்று சேர வேண்டும் என்று டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com