'அரசினர் இல்லங்களில் சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு'; சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

‘அரசினர் இல்லங்களில் சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு’ அளிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
'அரசினர் இல்லங்களில் சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு'; சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
Published on

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, வேலூரில் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பியோடியது பற்றியும், பாதுகாப்பு இல்லங்களில் இருந்து சிறுவர்கள் தப்பி செல்லும் சம்பவம் தொடருவது பற்றியும் நிருபர்கள் கேட்டதற்கு அவர் பதில் அளிக்கையில், ''பாதுகாப்பு இல்லங்களில் சிறுவர்கள் சரியான பாதுகாப்போடு தான் வைக்கப்படுகிறார்கள். ஆனால் சில நேரங்களில் அவர்கள் தப்பி செல்வது அங்கிருக்கிறவர்களின் துணையோடா? அல்லது வெளிநபர்களின் உதவியோடா? அல்லது அவர்களது சொந்த முயற்சியிலா? என்பதை கண்டறிந்து, தப்பிச்சென்றவர்களை உடனடியாக கண்டுபிடித்துவிடுவோம். அதில் எந்த தவறும் நடக்காது'' என்றார். தொடர்ந்து அவர் கூறுகையில், 'ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக ஐகோர்ட்டில் உரிய பதில் மனுவை அரசு தாக்கல் செய்யும்' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com