ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Published on

ராமநாதபுரம்,

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com