கனமழை எதிரொலி : பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த பட்டயத்தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது
கனமழை எதிரொலி : பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த பட்டயத்தேர்வுகள் ஒத்திவைப்பு
Published on

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக இன்று 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டய தேர்வுகள், டிப்ளமோ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஐடிஐ மாணவர்களுக்கு இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மறு தேர்வு தேதி dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com