தண்ணீர் வரத்து அதிகரிப்பால் குற்றால அருவிகளில் குளிக்க தடை..!

தண்ணீர் வரத்து அதிகரிப்பால் குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com