வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு

வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளது.
வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு
Published on

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கை பயிரிட்டுள்ளனர். பின்னர் விளைந்ததும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். அங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்ற நிலையில், தற்போது அது ரூ.13 ஆயிரத்திற்கும், சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.12 ஆயிரத்திற்கு விற்ற நிலையில், தற்போது ரூ.13 ஆயிரத்து 1500-க்கு விற்பனையாகிறது. வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com