கடன் வாங்கி கொடுக்காததால்பெண்ணை தாக்கி நகை பறிப்பு

தேனி அருகே கடன் வாங்கி தராததால் பெண்ண தாக்கி நகையை பறித்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடன் வாங்கி கொடுக்காததால்பெண்ணை தாக்கி நகை பறிப்பு
Published on

தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லைநகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி லோகமணி (வயது 30). இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு அறக்கட்டளையின் பெயரில் மகளிர் சேவை மையம் நடத்தி வருகின்றனர். அதன் மூலம் மகளிர் குழுவினருக்கு கடன் வாங்கிக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், பாரஸ்ட்ரோடு பகுதியில் வசிக்கும் பிரியா என்பவர் ஏற்கனவே வாங்கிய கடனை திரும்பிச் செலுத்தாமல் மீண்டும் கடன் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், கடன் வாங்கிக் கொடுக்க மறுத்ததால், பிரியா மற்றும் அவருடன் சிலர் முல்லைநகருக்கு வந்து லோகமணியிடம் தகராறு செய்தனர். அப்போது அவரையும், அவருடைய தம்பி அரவிந்தன், தோழி பிரியதர்ஷினி ஆகியோரையும் அவர்கள் தாக்கினர். இதில் அவர்கள் 3 பேரும் காயம் அடைந்தனர். மேலும் அவர்கள் லோகமணியின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் லோகமணி புகார் செய்தார். அதன்பேரில், பிரியா, செல்வி உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com