குழாய் இணைப்பு பணிகள் காரணமாக ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகரில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் - லாரிகள் மூலம் வழங்க நடவடிக்கை

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
குழாய் இணைப்பு பணிகள் காரணமாக ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகரில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் - லாரிகள் மூலம் வழங்க நடவடிக்கை
Published on

சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாய் இணைப்புப் பணிகள், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் அயனாவரம்-குன்னூர் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 31-ந்தேதி (நாளை) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தண்டையார்ப்பேட்டையில் உள்ள 42, 43, 48-வது வார்டுகள் (தண்டையார்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதிகள்), ராயபுரத்தில் உள்ள 49, 50, 51, 52, 53-வது வார்டுகள், திரு.வி.க.நகரில் உள்ள 73, 76, 77-வது வார்டுகள் (புளியந்தோப்பு, பட்டாளம்) ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளலாம். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள https://chennaimetrowater.tn.gov.in/ என்ற குடிநீர் வாரியத்தின் இணையதள முகவரியை தொடர்புகொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com