

சென்னை,
கடந்த சில மாதங்களாக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் அதன் தொடர்புடைய எரிபொருட்கள் விலை முன்எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. பெட் கோக் என்ற மாற்று எரிபொருள் முற்றிலும் கிடைப்பது இல்லை.
தற்போது சரக்கு கப்பல்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலை உயர்ந்த நிலக்கரியும் கிடைப்பது இல்லை. அதே வேளையில் நிலக்கரி மற்றும் பெட் கோக் விலை மேலும் உயரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரூ.60 உயர வாய்ப்பு
இந்த சூழ்நிலையால் சிமெண்ட் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிமெண்ட் உற்பத்தி செலவு ஒரு மூட்டைக்கு ரூ.60 வரை உயரலாம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் எரிபொருள் செலவு எவ்வளவு உயரும் என்பதை தீர்மானிப்பது கடினமாக உள்ளது. அதேபோன்று சிமெண்ட் உற்பத்தி திறனை எந்த அளவுக்கு எட்ட முடியும் என்பதை தீர்மானிப்பதும் கடினமாக இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.