ஊராட்சி மன்ற அலுவலகம் மீது சாணம் வீச்சு - பெண் ஊராட்சி மன்ற தலைவர் ஆதங்கம்

செஞ்சி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் மீது மர்ம நபர்கள் சாணம் வீசி சென்றுள்ளனர்.
ஊராட்சி மன்ற அலுவலகம் மீது சாணம் வீச்சு - பெண் ஊராட்சி மன்ற தலைவர் ஆதங்கம்
Published on

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கொங்கரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக காயத்ரி என்ற இளம்பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி ஊராட்சி மன்ற கட்டிடம் புதுப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், மர்மநபர்கள் சிலர் அந்த கட்டிடம் மீது சாணம் வீசி சென்றுள்ளனர். இதைபோல அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மூன்று முறை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து செஞ்சி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செஞ்சி அருகே பொது சொத்துகளை சேதப்படுத்திய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பெண் ஊராட்சி மன்ற தலைவி புகார் அளித்துள்ளார்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கூறியதாவது:-

கொங்கரப்பட்டு கிராமத்தில் பள்ளி, பஞ்சாயத்து அலுவலகத்தை புதுப்பித்தோம். புதுபிக்கப்பட்ட இரண்டு நாட்களில் பள்ளி தண்ணீர் குழாய்களை உடைத்தனர், பஞ்சாயத்து அலுவலகம் மீது சாணம் அள்ளி வீசியுள்ளனர். எனவே பொது சொத்துகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com