தி.மு.க.வில் மேலும் 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியல் துரைமுருகன் வெளியிட்டார்

தி.மு.க.வில் மேலும் 2 கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியலை பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
தி.மு.க.வில் மேலும் 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியல் துரைமுருகன் வெளியிட்டார்
Published on

சென்னை,

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இதுவரை 5 கட்டங்களாக வெளியிடப்பட்டுள்ளன. இந்தநிலையில் 6-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார்.

இதில் திண்டிவனம், விருத்தாசலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, அறந்தாங்கி ஆகிய 5 நகராட்சிகளுக்கும், செஞ்சி, அனந்தபுரம், மரக்காணம், தொரப்பாடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், ஒரத்தநாடு, வல்லம், திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி, திருக்காட்டுப்பள்ளி, பொன்னமராவதி, அரிமளம், கீரமங்கலம், ஆலங்குடி ஆகிய 16 பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க. வேட்பாளர் பட்டியல்

இந்தநிலையில் தி.மு.க. சார்பில் 7-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் மதுரை மாநகராட்சிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்தவகையில் மதுரை வடக்கு தொகுதியில் 15 வார்டுகளுக்கும், மதுரை தெற்கு தொகுதியில் 9 வார்டுகளுக்கும், மதுரை மத்திய தொகுதியில் 12 வார்டுகளுக்கும், மதுரை மேற்கு தொகுதியில் 15 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சிவகாசி மாநகராட்சியில் 29 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல ஒட்டன்சத்திரம், விருதுநகர், ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, தேவகோட்டை நகராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

வேடசந்தூர், வடமதுரை

பரவை, கீரனூர், வேடசந்தூர், எரியோடு, வடமதுரை, அய்யலூர், நத்தம், பாளையம், காரியாபட்டி, மல்லாங்கிணறு, ஆர்.எஸ்.மங்களம், அபிராமம், முதுகுளத்தூர், மண்டபம், தொண்டி, கண்டனூர், புதுவயல், கோட்டையூர், பள்ளத்தூர், நெற்குப்பை, இளையான்குடி, திருப்புவனம், சிங்கம்புணரி, திருப்பத்தூர், கானாடுகாத்தான், நாட்டரசன்கோட்டை, முத்தூர், சென்னிமலை, மூலனூர், ருத்ராவதி, கொளத்துப்பாளையம், கன்னிவாடி பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com