தி.மு.க.வில் மேலும் 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியல் துரைமுருகன் வெளியிட்டார்

தி.மு.க.வில் மேலும் 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தி.மு.க.வில் மேலும் 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியல் துரைமுருகன் வெளியிட்டார்
Published on

சென்னை,

தமிழக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2 கட்ட பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார்.

இதில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 11 வார்டுகள், தாம்பரம், திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகள், செங்கல்பட்டு, மறைமலைநகர், குன்றத்தூர், மாங்காடு, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, லால்குடி, துவாக்குடி, மணப்பாறை, துறையூர், முசிறி, திருவண்ணாமலை, ஆரணி, திருவத்திபுரம் (செய்யாறு), வந்தவாசி, தென்காசி, சங்கரன்கோவில், உளுந்தூர்பேட்டை ஆகிய 17 நகராட்சிகள், திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், ஸ்ரீபெரும்புதூர், பூவாளூர், கல்லக்குடி, புள்ளம்பாடி, சிறுகமணி, பொன்னம்பட்டி, கூத்தைப்பார், மேட்டுப்பாளையம், உப்பிலியபுரம், தொட்டியம், காட்டுப்புத்தூர், பாலகிருஷ்ணாம்பட்டி, தாத்தையங்கார்பேட்டை, ச.கண்ணனூர், மண்ணச்சநல்லூர், செங்கம், புதுப்பாளையம், வேட்டவலம், கீழ்பென்னாத்தூர், கண்ணமங்கலம், தேசூர், பெரணமல்லூர், போளூர், களம்பூர், சேத்துப்பட்டு, இலஞ்சி, மேலகரம், ஆலங்குளம், குற்றாலம், கீழப்பாவூர், திருவேங்கடம், ஆழ்வார்குறிச்சி, சுந்தரபாண்டியபுரம், சின்ன சேலம், சங்கராபுரம், வடக்கனந்தல், கண்ணங்குறிச்சி, கருப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர் ஆகிய 43 பேரூராட்சிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

4-ம் கட்ட பட்டியல்

தி.மு.க. 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலும் நேற்று வெளியானது. இதில் கரூர், ஓசூர் ஆகிய 2 மாநகராட்சிகள், திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, குளித்தலை, புகழூர், பள்ளப்பட்டி, ராசிபுரம், நாமக்கல் மேற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் தெற்கு, கிருஷ்ணகிரி ஆகிய 12 நகராட்சிகள், உதயேந்திரம், நாட்றாம்பள்ளி, அரவக்குறிச்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்டம், மருதூர், நங்கவரம், இரா.புதுப்பட்டி, அத்தனூர், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மோகனூர், பட்டணம், வெண்ணந்தூர், சீராப்பள்ளி, சேந்தமங்கலம், பிள்ளாநல்லூர், நாமகிரிப்பேட்டை, பர்கூர், ஊத்தங்கரை, நாகரசம்பட்டி, காவேரிப்பட்டினம், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய 28 பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com