கால்நடை மருத்துவ படிப்பில் சேர காலஅவகாசம் நீட்டிப்பு : 17-ந்தேதி கடைசி நாள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கால்நடை மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
கால்நடை மருத்துவ படிப்பில் சேர காலஅவகாசம் நீட்டிப்பு : 17-ந்தேதி கடைசி நாள்
Published on

சென்னை,

விண்ணப்பிக்க கடைசி நாளாக 10.6.2019 (நேற்று) என்று இந்த படிப்புகளுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுக்கு பிறகு விண்ணப்பங்கள் அதிகளவில் வருவதாலும், மாணவர்கள் நலன் கருதியும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி, வருகிற 17-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்தும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தும், தகுந்த சான்றிதழ் நகல்களுடன் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com