ஜெயலலிதா சிகிச்சையின் போது மருத்துவமனை சிசிடிவி கேமராக்கள் நிறுத்தப்பட்டன- பிரதாப் ரெட்டி

ஜெயலலிதா சிகிச்சையின் போது மருத்துவமனை சிசிடிவி கேமராக்கள் நிறுத்தப்பட்டன - அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறினார். #Jayalalithaa #JayalalithaaTreatment #PrathapReddy #ApolloHospitals
ஜெயலலிதா சிகிச்சையின் போது மருத்துவமனை சிசிடிவி கேமராக்கள் நிறுத்தப்பட்டன- பிரதாப் ரெட்டி
Published on

சென்னை

அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது :-

ஜெயலலிதாவை யார் சந்திக்க வேண்டும் என உடன் இருந்தவர்கள் கூறிய நபர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் துரதிருஷ்டவசமாக செயலிழக்கம் செய்யப்பட்டன. அதனால்தான் அவர் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் எதுவும் இல்லாமல் போனது .ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லாதவர்கள் அந்த விடியோ காட்சிகளைப் பார்க்க நேரிடும் என்பதற்காகவே சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டன. வார்டு பாய் முதல் தலைமை மருத்துவர் வரை அனைவரும் ஜெயலலிதாவை சிறப்பாக கவனித்தனர்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையால் விரைவாக குணமடைந்து வந்தார். ஜெயலலிதா உடல்நலம் தேறி வருவதாக நாங்கள் நினைத்தோம் உடல்நலம் தேறி வருவதற்கு அத்தனை சிகிச்சைகளையும் அப்போலோ செய்தது. ஒரு நாள் சிகிச்சை அல்ல; பல வாரங்கள் சிகிச்சை தொடர்ந்து நடந்தது. எதிர்பாராத சூழலில் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான எல்லா தகவலையும் ஆவணங்களையும் விசாரணை ஆணையத்தில் கொடுத்துள்ளோம்

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தர சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அப்போலோ மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்களும் சிறப்பான சிகிச்சை அளித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com