வாரவிடுமுறையையொட்டிவைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வாரவிடுமுறையையொட்டி நேற்று, வைகை அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
வாரவிடுமுறையையொட்டிவைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

வைகை அணை பூங்கா

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை மற்றும் பூங்கா அமைந்துள்ளது. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான வைகை அணைக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதன்படி, வாரவிடுமுறையான நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வைகை அணை பூங்காவில் குவிந்தனர்.

சிறுவர் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்குகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏறி மகிழ்ச்சியுடன் பொழுதை களித்தனர். மேலும் சிறுவர்களுக்காக இயக்கப்படும் உல்லாச ரெயிலில் குடும்பத்துடன் பயணம் செய்து மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள புல்வெளிகளில் குடும்பமாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடினர்.

சுற்றுலா பயணிகள்

வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதால், காலை முதல் மாலை வரை மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதனால் வைகை அணை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் வைகை அணை வலதுகரை பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இசை நடன நீருற்று பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் இசை நடனநீருற்றை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனவே வைகை அணை பூங்காவை தொடர்ந்து பராமரிப்பு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com