துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

எறும்பூர் கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
Published on

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த எறும்பூர் கிராமத்தில் 21 ஆண்டுக்கு பிறகு  திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி மகா பாரத சொற்பொழிவும், கண்ணன், தர்மன், பீமன், நகுலன்  ஆகிய உற்சவ சுவாமிகள் வீதி உலாவும் நடைபெற்றது. இந்த நிலையில் துரியோதனன் படுகளமும், தீமிதி விழாவும் நடைபெற்றது. விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்தனர்.

இதில் சென்னை, காஞ்சீபுரம், வந்தவாசி, செய்யாறு, ஆரணி, சேத்துப்பட்டு ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com