தசரா, ஆயுத பூஜை விடுமுறை: சென்னையில் விமான கட்டணம் உயர்வு - பயணிகள் அதிர்ச்சி

தசரா, ஆயுத பூஜை போன்ற தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கான விமான கட்டணம் உயர்ந்துள்ளது.
தசரா, ஆயுத பூஜை விடுமுறை: சென்னையில் விமான கட்டணம் உயர்வு - பயணிகள் அதிர்ச்சி
Published on

ஆலந்தூர்,

தமிழகத்தில் ஆயுத பூஜை உள்பட நவராத்திரி விழாவிற்காக தொடாந்து 5 நாட்கள் விடுமுறைகள் காரணமாக சொந்த ஊாகளுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் பஸ், ரெயில்களில் நிறைந்து வழிகிறது. பஸ், ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பயணிகள் விமான பயணங்களை மேற்கொள்கின்றனா.

ஆனால் உள்நாட்டு விமான கட்டணங்களின் திடீ உயாவு பயணிகளை அதிச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதைப்போல் சென்னையில் திருச்சி, கோவை, திருவனந்தபுரம், பெங்களூ உள்பட பல நகரங்களுக்கு செல்லும் பயணிகள் கட்டணமும் அதிகரித்துள்ளது.

இதுபற்றி விமான நிறுவனங்கள் தரப்பில் விசாரித்தபோது,

பயணிகள் கூட்டத்தால் கட்டணம் உயாத்தப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. குறைந்த கட்டணத்தில் குறிப்பிட்ட சீட்கள் மட்டும் ஒதுக்கி விட்டு மற்ற சீட்களுக்கு 2 அல்லது 3 விதமான கட்டணங்களை நிணயித்திருப்போம்.முதலில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு குறைந்த கட்டண டிக்கெட்டும் அதன்பின்பு வருபவாகளுக்கு படிப்படியாக கட்டணம் அதிகரிக்கும். இதுதான் நடைமுறையில் உள்ளது என்று கூறுகின்றனா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com