தசரா ஸ்பெஷல்: பெங்களூரு - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்

சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (அக்.15) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தசரா ஸ்பெஷல்: பெங்களூரு - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்
Published on: 

சென்னை,

தசரா விழாவையொட்டி, பெங்களூரு - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெங்களூரு கன்டோன்மென்டில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06533) மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடியை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து அக்டோபர் 17-ந் தேதி மாலை 3.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06534) மறுநாள் காலை 5.30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்டை சென்றடைகிறது. 21 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மேலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோல், பெங்களூருவில் இருந்து அக்டோபர் 17-ந் தேதி இரவு 12.05 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06545) அன்று பகல் 2 மணிக்கு கன்னூரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கன்னூரில் இருந்து அக்டோபர் 17-ந் தேதி மாலை 6.25 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06546) மறுநாள் காலை 9.45 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்டை சென்றடைகிறது.

19 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (அக்.15) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

மேலும், பெங்களூரு கன்டோன்மென்டில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி காலை 7.30 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06587) அன்று மதியம் 3 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலை வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி மாலை 4.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06588) அன்று இரவு 11.30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்டை சென்றடைகிறது.

20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com