மதனகோபால சுவாமி கோவிலில் துவாதசி ஆராதனை

மதனகோபால சுவாமி கோவிலில் துவாதசி ஆராதனை நடந்தது.
மதனகோபால சுவாமி கோவிலில் துவாதசி ஆராதனை
Published on

பெரம்பலூரில் உள்ள பஞ்ச பாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடந்தது. நேற்று முன்தினம் இரவில் வெள்ளி கருட வாகனத்தில் வாண வேடிக்கை, மேளதாளம் முழங்க சுவாமி திருவீதி உலா நடந்தது. இதைத்தொடர்ந்து ராப்பத்து உற்சவம் தொடங்கியது. நேற்று காலை துவாதசி ஆராதனை நடந்தது. இதனை முன்னிட்டு உற்சவ பெருமாளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, 5 தலை கொண்ட நாகத்தில் வைத்து சிறப்பு ஆராதனை நடந்தது. மூலவருக்கும், மரகதவல்லி தாயாருக்கும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன் சிறப்பு திருவாராதனையை நடத்தினார். துவாதசி உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை வழிபட்டு தங்களது ஏகாதசி விரதத்தை முடித்தனர். முக்கிய நிகழ்ச்சியான நம்மாழ்வார் மோட்சமும், ராப்பத்து உற்சவ நிறைவும் வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது. அன்று இரவு சொர்க்கவாசல் மூடப்படுகிறது. இதைத்தொடர்ந்து தனுர்மாத உற்சவமும், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவும் நிறைவடைகிறது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com