கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்; அதிகாரி தகவல்

கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெற இருக்கிறது.
கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்; அதிகாரி தகவல்
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் மாதந்தோறும் காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. அதன்படி கண்டமங்கலம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செஞ்சி கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம் 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திலும், திண்டிவனம் கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம் 25-ந் தேதி (புதன்கிழமை) அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள், பொதுமக்கள் நேரில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறும் அன்று அரசு விடுமுறை நாளாக இருப்பின் விடுமுறைக்கு அடுத்துவரும் வேலை நாளன்று (அலுவலக நாளில்) குறைகேட்பு கூட்டம் நடைபெறும். இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com