மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

தஞ்சாவூர்;

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை செயற்பொறியாளர் கலைவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை மின்பகிர்மான வட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை வல்லம் நம்பர்-1 சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடக்கிறது.எனவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், திருக்கானூர்பட்டி, வடக்கு தஞ்சை, குருங்குளம், மருங்குளம், மெலட்டூர், திருவையாறு புறநகர், திருவையாறு நகர், திருக்காட்டுப்பள்ளி புறநகர், திருக்காட்டுப்பள்ளி நகர், நடுக்காவேரி ஆகிய பகுதி அலுவலகங்களை சேர்ந்த மின்நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து தெரிவிக்கலாம்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com