மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
Published on

நாகை மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) மலர்வண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை 2-வது கடற்கரை சாலையில் இயங்கி வரும் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாகை கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) கால 11 மணி அளவில் மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நாகை, வெளிப்பாளையம், நாகூர், திருமருகல், கங்களாஞ்சேரி, சிக்கல், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, விழுந்தமாவடி, வேதாரண்யம், கரியாப்பட்டினம், வாய்மேடு ஆகிய பிரிவுகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com