சிறுவாபுரி முருகனை தரிசிக்க எளிய வழி - அமைச்சர் கூறிய குட் நியூஸ்

சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுப்பாதை தயாராகி வருவதாக அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார்.
சிறுவாபுரி முருகனை தரிசிக்க எளிய வழி - அமைச்சர் கூறிய குட் நியூஸ்
Published on

சென்னை,

பக்தர்களின் வசதிக்காக திருத்தணி ரெயில் நிலையத்திலிருந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் இலவச பஸ் சேவையை அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ. வேலு, நாசர் ஆகியோர் தொடக்கிவைத்தனர்

தொடர்ந்து, சிறுவாபுரி கோவிலுக்கு செல்வதற்காக புதிய வழித்தடம் அமைப்பதற்கான இடத்தை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

"சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு மாற்றுப்பாதையாக 4 வழிச்சாலையை ரூ.45 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த 4 வழிச்சாலைக்கான பணிகளை 6 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 4.6 கி.மீ. நீளத்திற்கு அமையவுள்ள இந்த சாலைக்காக 12 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த புதிய சாலையால் சிறுவாபுரி முருகனை தரிசிப்பதற்கான வழி எளிதாகும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com