தினமும் 25 கிராமுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால் மாரடைப்பு, சர்க்கரை நோய் அபாயம் - உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

‘இனிப்பு பிரியர்களுக்கான ஒரு எச்சரிக்கை' என்ற தலைப்பில் உணவு பாதுகாப்பு துறை ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.
தினமும் 25 கிராமுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால் மாரடைப்பு, சர்க்கரை நோய் அபாயம் - உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை
Published on

சென்னை,

நாம் அன்றாடம் இனிப்பு பொருட்களை சாப்பிட்டு வருகிறோம். தித்திப்பான அந்த உணவு பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு கசப்பான செய்தியை தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு துறை தனது சமூக வலைத்தள பக்கத்தில், இனிப்பு பிரியர்களுக்கான ஒரு எச்சரிக்கை' என்ற தலைப்பில் பதிவை வெளியிட்டுள்ளது.

அதில், "உங்க உடம்புக்கு சுகர் எப்போது எதிரியா மாறுதுன்னு தெரியுமா? நீங்க தினமும் 25 கிராமுக்கு மேல சர்க்கரை சாப்பிடுறீங்களா? அப்போ இது உங்களுக்கான அலர்ட்'. ஒரு தேக்கரண்டியில் 4 கிராம் அளவுக்கு சர்க்கரை இருக்கும். அதிக சர்க்கரை உட்கொண்டால் சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கணக்கு போட்டு பாருங்க, சுவைக்காக உங்க ஆரோக்கியத்தை இழக்காதீங்க" என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com