சென்னை சோழிங்கநல்லூரில் இ-பைக் பேட்டரி வெடித்து விபத்து - வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து நாசம்

இ-பைக் பேட்டரியை சார்ஜ் செய்த போது திடீரென வெடித்து விபத்திற்குள்ளானதில், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின.
சென்னை சோழிங்கநல்லூரில் இ-பைக் பேட்டரி வெடித்து விபத்து - வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து நாசம்
Published on

சென்னை,

சோழிங்கநல்லூர் பரமேஸ்வரன் நகரில் குடியிருப்பவர் ஈஸ்வரன். சமையல் வேலை செய்து வரும் இவர், இ-பைக் எனப்படும் மின்சார வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது வாகனத்தை கீழே நிறுத்தி விட்டு, அதன் பேட்டரிக்கு முதல் மாடியில் உள்ள வீட்டின் அறையில் வைத்து சார்ஜ் போட்டுள்ளார். அப்போது நள்ளிரவில் திடீரென பலத்த சத்தத்துடன் பேட்டரி வெடிக்கவே, துரிதமாக செயல்பட்ட ஈஸ்வரன், தனது மனைவி, குழந்தைகளுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனிடையே வீட்டில் தீ பரவி எரியத் தொடங்கியது. உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் அங்கு வந்து தீயை அணைப்பதற்குள், வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com