கொரோனா தொற்று பரவல் எதிரொலி: குருத்தோலை ஞாயிறு பவனி ரத்து

கொரோனா தொற்று காரணமாக குருத்தோலை ஞாயிறு பவனி ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பரவல் எதிரொலி: குருத்தோலை ஞாயிறு பவனி ரத்து
Published on

சென்னை,

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த நாளை கிறிஸ்தவர்கள் உயிர்த்தெழுதல் நாளாகவும், ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக 40 நாட்கள் உபவாசம் இருந்த நாட்களை தவக்காலமாகவும், அந்த நாட்களின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாகவும் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த நாளில் கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை பிடித்து, ஊர்வலமாக செல்வார்கள். அதன்படி, வருகிற ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட உள்ளது.

ஊர்வலமாக செல்ல வேண்டாம்

தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதிகளவில் மக்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடக்கூடாது. முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கிறிஸ்தவர்களின் இந்த குருத்தோலை ஞாயிறு தினத்தன்று ஊர்வலமாக செல்ல வேண்டாம் என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் ரோமன் கத்தோலிக்கம், சி.எஸ்.ஐ., இ.சி.ஐ., பெந்தேகோஸ்து, டி.இ.எல்.சி., லூத்தரன் உள்பட கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மேலும், குருத்தோலை பவனியை, ஆலய வளாகத்திற்குள் எளிமையாக நடத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com