நிவர் புயல் எதிரொலி: தென்மாவட்ட ரெயில்கள் இன்று ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நிவர் புயல் எதிரொலியால் தூத்துக்குடி, நெல்லை உள்பட 24 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று (புதன்கிழமை) ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
நிவர் புயல் எதிரொலி: தென்மாவட்ட ரெயில்கள் இன்று ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

சென்னை,

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மேலும் 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களை இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நிவர் புயல் எதிரொலியால் கீழ்க்கண்ட 24 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

சென்னை எழும்பூர்-மதுரை-எழும்பூர் (வண்டி எண்: 02613/02614), மதுரை- எழும்பூர்-மதுரை (02636/ 02635), எழும்பூர்- காரைக்குடி- எழும்பூர் (02605/02606), எழும்பூர்-செங்கோட்டை- எழும்பூர் (02661/02662) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், நெல்லை- எழும்பூர்-நெல்லை (02632/ 02631), தூத்துக்குடி-எழும்பூர்- தூத்துக்குடி (02694/ 02693), எழும்பூர்-கன்னியாகுமரி-எழும்பூர் (02633/02634), எழும்பூர்-கொல்லம்-எழும்பூர் (06723/06724), ராமேசுவரம்-எழும்பூர்-ராமேசுவரம் (02206/02205), எழும்பூர்-கொல்லம்-எழும்பூர்(06101/06102) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், மதுரை-எழும்பூர்-மதுரை (02653/02654), எழும்பூர்-திருச்சி-எழும்பூர் (02653/02654) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com