கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: கோவில்களில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க அறநிலையத்துறை உத்தரவு

கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி காரணமாக கோவில்களில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: கோவில்களில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க அறநிலையத்துறை உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். அத்துடன் கோவில் வளாகத்தில் கைகளை சுத்திகரிக்க கிருமி நாசினி வழங்க வேண்டும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை கோவிலுக்கு வருவதை பாதுகாப்பு கருதி தவிர்க்க அறிவுறுத்தலாம்.

கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே வரிசையில் பக்தர்கள் அனுமதிக்க வேண்டும். பக்தர்கள் கோவிலுக்கு தேங்காய் பழம், பூ போன்றவற்றை கொண்டு வந்து அர்ச்சனை செய்யவதை தவிர்க்கலாம். அதேபோல் பிரசாதம் மற்றும் தீர்த்தம் (புனித நீர்) வினியோகத்தையும் தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

பங்குனி திருவிழா நடந்து வரும் கோவில்களில் அப்பகுதிகளில் உள்ள மாவட்ட கலெக்டர், காவல் துறை அதிகாரிகள், வருவாய் துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோவில் அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com