புயல் எதிரொலி... தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


புயல் எதிரொலி... தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 28 Oct 2025 5:52 AM IST (Updated: 28 Oct 2025 6:03 AM IST)
t-max-icont-min-icon

மோந்தா புயல் காரணமாக சென்னையில் தொடர் மழை பெய்து வருகிறது.

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மோந்தா புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இன்று மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story