வடகிழக்கு பருவமழை எதிரொலி.. சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

ஆபத்தான விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை கத்தரித்து அகற்றும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை எதிரொலி.. சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
Published on: 

சென்னை,

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழும் நிலையில் உள்ள ஆபத்தான மரங்களின் கிளைகளை கத்தரித்து அகற்றும் பணியினை மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாநகராட்சி

இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆபத்தான விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை கத்தரித்து அகற்றும் தீவிரப் பணி (Mass Tree Pruning) மேற்கொள்ளப்பட்டது.

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1 முதல் 15 வரையிலான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆபத்தான விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை கத்தரித்து அகற்றும் தீவிரப் பணி (Mass Tree Pruning) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடகிழக்குப் பருவமழை

மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதுவரை 78,161 மரங்களின் கிளைகள் கத்தரித்து அகற்றப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மத்திய வட்டாரத்திற்குட்பட்ட திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்கள் வாரியாக ஆபத்தான விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை கத்தரித்து அகற்றும் தீவிரப் பணி இன்றும் (20.10.2026), நாளையும் (21.10.2026) மேற்கொள்ளப்படுகிறது.

மத்திய வட்டாரப் பகுதிகளில் இன்று மரங்களின் கிளைகள் அகற்றப்பட்ட விவரம்

வ. எண் மண்டலம் கண்டறியப்பட்ட இடங்கள் கத்தரித்து அகற்றப்பட்ட மரங்களின் கிளைகள்

1. திரு.வி.க.நகர் மண்டலம் - 18 (கண்டறியப்பட்ட இடங்கள்) - 150 (மரங்களின் கிளைகள்)

2. அம்பத்தூர் மண்டலம் - 17 (கண்டறியப்பட்ட இடங்கள்),185 (மரங்களின் கிளைகள்)

3. அண்ணாநகர் மண்டலம் - 7 (கண்டறியப்பட்ட இடங்கள்), 175 (மரங்களின் கிளைகள்)

4. தேனாம்பேட்டை மண்டலம் - 2 (கண்டறியப்பட்ட இடங்கள்), 71 (மரங்களின் கிளைகள்)

5. கோடம்பாக்கம் மண்டலம் - 6 (கண்டறியப்பட்ட இடங்கள்),150 (மரங்களின் கிளைகள்)

மொத்தம் 50 (கண்டறியப்பட்ட இடங்கள்),731 (மரங்களின் கிளைகள்)

மேலும், வடக்கு வட்டாரம் மற்றும் தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் ஆபத்தான விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை கத்தரித்து அகற்றும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com