புயல் எதிரொலி.. சென்னையில் 11 விமானங்கள் ரத்து

5 புறப்பாடு மற்றும் 6 வருகை என மொத்தம் 11 விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டு உள்ளது.
புயல் எதிரொலி.. சென்னையில் 11 விமானங்கள் ரத்து
Published on: 

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல், சென்னைக்கு 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டித்தீர்த்தது. மேலும், சென்னைக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

விமானங்கள் ரத்து

இந்த நிலையில், புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் 5 புறப்பாடு மற்றும் 6 வருகை என மொத்தம் 11 விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டு உள்ளது. அதாவது, சென்னையில் இருந்து திருச்சி, கடப்பா, ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா செல்லும் சிறிய ரக விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.

X