பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

கேரள முன்னாள் முதல் மந்திரி வீடு உள்பட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
மு.க.ஸ்டாலின் - பினராயி விஜயன்
கோப்பு படம் (ஸ்டாலின் - பினராயி விஜயன்)
Published on

சென்னை,

‘கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்’ என்ற கனிம நிறுவனத்துக்கு கேரள அரசு சுரங்க அனுமதி வழங்கியதில் லஞ்சம் பெற்றதாகவும், பண மோசடி நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவின் ‘எக்ஸாலாஜிக்’ என்ற ஐடி நிறுவனத்துக்கு நேரடி தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்தன.

முக ஸ்டாலின் கண்டனம்

இந்த விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக இன்று பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதானை மேற்கொண்டது. கேரள அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

எதிர்க்கட்சிகளை குறிவைத்து

கேரள முன்னாள் முதல் மந்திரி பினராயி விஜயனை குறிவைத்து அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைகளை கடுமையாக கண்டிக்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகள் தொடர்ந்து அரசியல் ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன என்ற கடும் சந்தேகத்தை இந்த நடவடிக்கைகள் மீண்டும் எழுப்புகின்றன. பினராயி விஜயனை ஏன் பாஜக இன்னும் குறிவைக்கவில்லை? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த சில காங்கிரஸ் தலைவர்களின் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளில் உண்மையில்லாததையும் இந்த சம்பவம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com