

சென்னை,
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டது.
இந்த தேர்வின் மூலம் 1,503 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் பொருட்டு 9 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குனர் ஆர்.சுடலைக்கண்ணன், பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் க.லதா, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.