“வேளாண் மசோதாக்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி எடப்பாடி பழனிசாமி மட்டும்தான்” - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

வேளாண் மசோதாக்களை ஆதரிக்கும் ஒரே ஒரு விவசாயி எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
“வேளாண் மசோதாக்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி எடப்பாடி பழனிசாமி மட்டும்தான்” - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்
Published on

நாகை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நாகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், வேளாண் சட்ட மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசாங்கம் எத்தகைய தீங்கான சட்டங்களை கொண்டு வந்தாலும், அத்தனையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பது தான் மாநில அரசின் வேலையாக இருக்கிறது. இந்த சட்டங்களால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்றும் பஞ்சாப் வேறு, தமிழ்நாடு வேறு என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறுகிறார்.

மத்திய அரசால் நிறைவேற்றப்படுகின்ற சட்டம் என்பது நாடு முழுவதற்குமான சட்டமே தவிர, ஒவ்வொரு மாநிலத்திற்குமான சட்டம் அல்ல. எனவே நாடு முழுவதும் விவசாயிகள் இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் விவசாயிகளில் இந்த 3 சட்டங்களையும் ஆதரிக்கும் ஒரே ஒரு விவசாயி எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com