

சென்னை,
உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுத்த பிரதமா நரேந்திர மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மருத்துவம் மற்றும் உயர்கல்வி பயில உக்ரைன் சென்ற அனைத்து மாணவர்களையும் குறிப்பாக தமிழக மாணவச் செல்வங்களை கடும் போர் சூழலில் இருந்து அவர்களை பாதுகாப்பாக மீட்டு தாயகம் அழைத்து வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கும் அவர்களுக்கும், தமிழக மாணவர்கள் சார்பாகவும், எனது சார்பாகவும், அதிமுக சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.