

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தற்போது 6-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை அவர் அறிவித்துள்ளார். நாளை (புதன்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் காலை 11 மணிக்கு அவர் பிரசாரத்தை தொடங்குகிறார்.
அதனை தொடர்ந்து திருச்செந்தூரில் மகளிர் குழுவினருடன் கலந்துரையாடல், மாப்பிள்ளையூரணியில் இளைஞர் பாசறை-இளம் பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல். மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடியில் பொதுக்கூட்டம்.
நெல்லை-தென்காசி
18-ந் தேதி நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம் பகுதியில் பொதுக்கூட்டம். அதனை தொடர்ந்து நாங்குனேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மகளிர் சுயஉதவி குழுக்களுடன் கலந்துரையாடல், தொடர்ந்து அம்பாசமுத்திரத்தில் இளைஞர் பாசறை-இளம் பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்.
மாலை 4 மணிக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் இளைஞர் பாசறை-இளம் பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், 5.10 மணிக்கு பாவூர்சத்திரத்தில் பொதுக்கூட்டம். 6.30 மணிக்கு தென்காசி இசக்கி மஹாலில் மகளிர் குழுவுடன் கலந்துரையாடல்.
சங்கரன்கோவில்
19-ந் தேதி காலை 10 மணிக்கு கடையநல்லூர் பள்ளிவாசல் அருகே பொதுக்கூட்டம். வாசுதேவ நல்லூரில் மகளிர் குழுவுடன் கலந்துரையாடல், சங்கரன்கோவிலில் இளைஞர் பாசறை-இளம் பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.