மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மறுக்கும் திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அத்திக்கடவு-அவினாசி திட்டம் முழுமையாக செயல்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மறுக்கும் திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

அம்மா ஆட்சியில் மக்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்திற்காக, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 42 மாதங்களில், பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், அவை முழுமையாக முடிக்கப்படாமலும், கிடப்பிலும் போடப்பட்டுள்ளன. உதாரணமாக,

* விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் கடல் நீரை குடிநீராக்கும் சுமார் ரூ. 1,500 கோடி மதிப்பீட்டிலான திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

* விழுப்புரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில், அழகன்குப்பம் பக்கிங்ஹாம் கால்வாயிலும், ஆலம்பராகோட்டை அருகிலும் சுமார் ரூ. 235 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் திட்டம் - ரத்து செய்யப்பட்டுள்ளது.

* விழுப்புரத்தில் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் - ரத்து செய்யப்பட்டு உள்ளது.

* காவிரியின் குறுக்கே ஆதனூர் குமாரமங்கலம் தடுப்பணை காலதாமதமாக பணிகள் நடைபெறுகின்றன.

* காவிரியின் குறுக்கே நஞ்சை-புகளூர் கதவணையுடன் கூடிய தடுப்பணை காலதாமதமாக பணிகள் நடைபெறுகின்றன.

* அத்திக்கடவு-அவினாசி திட்டம் - முழுமையாக செயல்படுத்தவில்லை.

* காவிரி உபரி நீரினை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் முழுமையாக செயல்படுத்தவில்லை.

* தலைவாசல் கால்நடைப் பூங்கா - திறக்கப்படவில்லை.

* தென்காசி - ஜம்புநதி மேல்மட்டக் கால்வாய் திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

* திருநெல்வேலி இரட்டைகுளம் முதல் ஊத்துமலை வரை கால்வாய் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படவில்லை.

* ரூ. 125 கோடி மதிப்பீட்டிலான மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணி மூன்றாண்டுகளாக பணியில் தொய்வு.

இவ்வாறு விவசாயிகள், பொதுமக்கள் என்று அனைவருக்கும் பயன்படும் திட்டங்களை இந்த திராவிட மாடல் அரசு கிடப்பில் போட்டுள்ளதை பல அடுக்கிக்கொண்டே போகலாம். மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், அத்தியாவசியமற்ற செலவுகளை மு.க.ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கு சிறிதும் பயனளிக்காத கார் ரேஸ் நடத்தப்படுகிறது. கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன.

மு.க.ஸ்டாலின், அவரது தந்தை பெயரை அரசு கட்டிடங்களுக்கு வைக்க வேண்டுமென்றால், அவரது அறக்கட்டளை சார்பில் அப்பணிகளை மேற்கொள்ளலாம். போதிய நிதி இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பல முடக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, உடனடியாக தேவையான நிதியினை அத்திட்டங்களுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்ய மு.க.ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com