மருந்து கையிருப்பில் இல்லை என்று குழப்புகிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

ஜிப்மர் மருத்துவமனையில் அளிக்கப்படும் அதே சிகிச்சை முறை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மருந்து கையிருப்பில் இல்லை என்று குழப்புகிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி
Published on

சென்னை,

மருந்து கையிருப்பில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குழப்புகிறார். அவர் கூறிய Fomepizole இன்ஜெக்ஷன்(போமெபிசோல் ஊசி) தேவைக்கு அதிகமாகவே கையிருப்பில் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

20.06.2024 அன்று Omeprazole( ஒமேப்ரஸோல்)மருந்து இல்லை என்று கூறிய எடப்பாடிக்கு 4.42 கோடி Omeprazole மருந்து கையிருப்பு உள்ளது என்று பதில் அளித்தேன். பிறகு இன்று (22.06.2024) Fomepizole மருந்து கையிருப்பில் இல்லை என்று குழப்புகிறார் மருத்துவ நிபுணர் எடப்பாடி, Fomepizole injection தேவைக்கு அதிகமாகவே கையிருப்பில் உள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகத்தரமான மருத்துவ நெறிமுறைகள் (Treatment Protocol) மூக்கு வழி பிராண வாயு செலுத்துதல், நரம்பு வழி Drips  (ட்ரிப்ஸ்) எத்தனால் ஊசி, லியுகோவோரின் ஊசி, சோடா பை கார்பனேட் ஊசி, ஹிமோடையாலிசிஸ், பேன்டோபிரசோல் ஊசி, செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) பின்பற்றி சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அளிக்கப்படும் அதே சிகிச்சை முறை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. மருத்துவ நிபுணர் எடப்பாடி வேறு ஏதாவது புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்து சொன்னாலும் அது சரியானவையாக இருந்தால் அதனால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற நிலை இருப்பின் எடப்பாடி சிகிச்சை முறைகள் பின்பற்றப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com