

சென்னை,
கேரளாவின் புதிய முதல் மந்திரியாக சதீசன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள சதீசனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
”ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளின் சார்பில் இன்று கேரளத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சதீசன் அவர்களுக்கு எனது சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.”
என்று அவர் தெரிவித்துள்ளார்.