அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை


அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 23 Dec 2025 1:04 PM IST (Updated: 23 Dec 2025 1:07 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமியை மத்திய மந்திரி பியூஷ் கோயல் இன்று சந்திக்கிறார்.

சென்னை,

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி நகர்வுகள், விருப்ப மனுக்கள் அளித்தல், பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கிவிட்டன. இதனால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

இந்த நிலையில், தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று சென்னை வந்தார். அவர் தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி, கள நிலவரம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பியூஷ் கோயல் சந்தித்து தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்த நிலையில், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் இன்னும் சற்று நேரத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், அதிமுக முக்கிய நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்,

அதிமுகவிடம் 50-க்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தங்களுடன் வரும் சிறு கட்சிகளுக்கும் சேர்த்து பாஜக சுமார் 70 தொகுதிகள் வரை கேட்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பேச்சுவார்த்தைக்கு பின்னரே தொகுதி பங்கீடு குறித்து தெரியவரும்.

ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என இபிஎஸ் அழைப்பு விடுத்த நிலையில், தேமுதிக, பாமக உள்பட எந்த கட்சியும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்கத்து

1 More update

Next Story