எடப்பாடி பழனிசாமி ஒரு அரசியல் வியாபாரி: அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் தாக்கு

எடப்பாடி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரை சுற்றியுள்ளவர்களுக்கு நன்றாக தெரியும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஒரு அரசியல் வியாபாரி: அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் தாக்கு
Published on

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்..

பழனிசாமி தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம்; தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பா.ஜ.க.விடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.

புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும்..

அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவதொரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண்..

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com