அனைவரையும் அரவணைத்து செல்ல எடப்பாடி பழனிசாமி தயார் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி

அதிமுகவை காப்பாற்ற எந்த தியாகத்தையும் செய்ய எடப்பாடி பழனிசாமி தயாராகவே உள்ளார் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி
Published on: 

சென்னை,

கட்சிக்காக தியாகம் செய்ய இபிஎஸ் தயார் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது. அதே நேரம் அந்த தொகுதியை பறிகொடுத்ததுடன், 3-ம் இடத்துக்கு அ.தி.மு.க. தள்ளப்பட்டு உள்ளது. இந்த தோல்வியால் அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான குரல் அ.தி.மு.க.வில் மீண்டும் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

அதிமுகவில் மீண்டும் போர்க்கொடி

கடந்த முறை போர்க்கொடி தூக்கியபோதும், தற்போது அ.தி.மு.க.வில் இருக்கும் 19 எம்.எல்.ஏ.க்களுக்கு அவர்கள் ஏற்கனவே வகித்த கட்சிப் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட வில்லை. குறிப்பாக, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரின் மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் பறிக்கப்பட்டு, மாநில அளவில் முக்கியத்துவம் குறைந்த பதவிகள் மட்டுமே வழங்கப்பட்டன. எனவே, தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட கட்சிப் பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என்றும், தொடர் தேர்தல் தோல்விகள் குறித்து ஆராய்வதற்கு கட்சி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தி ருந்தனர். ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி செவிசாய்க்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்

தற்போதைய நிலையில், இந்த கோரிக்கைகளை அவர்கள் மீண்டும் கையில் எடுத்துள்ளனர். அ.தி.மு.க.வின் தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், அவர் பதவி விலகவில்லை என்றால் பொதுக்குழு மூலம் அவரை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதைப் போல. இந்த முறை எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு புதிய பொதுச்செயலாளரை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் திட்டமாக இருப்பதாக தெரிகிறது.

தற்போதைய நிலையில், அ.தி.மு.க.வில் எஞ்சியுள்ள 40 எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் இரண்டு பங்கு என்ற அடிப்படையில் 27 பேர் பிரிந்து தனி அணியாகச் செயல்பட்டால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது இந்தத் தரப்பினரின் கணக்காக உள்ளது.

அதிருப்தி அணியினர்

இந்த அணியினர் த.வெ.க. ஆட்சியில் பங்கேற்று, எடப்பாடி பழனிசாமியை தலைமைப் பொறுப்பில் இருந்து அகற்றுவதற்குத் தொடர்ந்து போராடுவது மற்றொரு திட்டமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, தற்போதைய நிலையில் அ.தி.மு.க. அதிருப்தி அணியினர், கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இதற்காக, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செய லாளர் பதவியில் இருந்து நீக்கும் வரை தீவிரமாக செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்து உள்ளனர்.

இதற்கான முதல் ஆயத்தக் கூட்டம்தான் நேற்று நடைபெற்றது என்று அவர்கள் தெரிவித்தனர். அதனால் தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளனர்.

இந்தநிலையில், சென்னையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதன் பிறகு மாண்புமிகு அம்மா அவர்களால் எகு கோட்டையாக மாற்றப்பட்ட இயக்கம்.

கட்டுகோப்பாக உள்ளது

அந்த இருவரும் தலைவருடைய மறைவிற்குப் பின்னால், இன்றைக்கு என்ன எடப்பாடி தலைமையில் அனைத்திந்திய அதிமுக கட்டுக்கோப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திலே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஒரு சிலர் தங்களுடைய கருத்துக்களை பொதுச் செயலாளருடைய கவனத்திற்கு நேரடியாக வந்து சொன்னால் நிச்சயமாக அவருடைய கருத்துக்களையும் அண்ணன்எடப்பாடி அவர்கள் கேட்டு நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை இந்த நேரத்திலே நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணன் டிவி சண்முகம் அவர்கள் நேற்றைய தினம் பேட்டி கொடுக்கின்ற பொழுது கூட இடைத்தேர்தலில் அனைத்திந்திய அதிமுக தோல்வி அடைந்து விட்டது. எனக்கு மனவேதனை அடைகிறேன் என்று சொல்லி இருக்கிறார். மரியாதைக்குரிய அண்ணன் சிபி சண்முகம் அவர்கள் விழுப்புரம் மாவட்ட துணை செயலாளராக இருந்த பொழுது அமைச்சராக இருந்த பொழுது 2019 ஆம் ஆண்டு 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதியிலே சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது.

இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும்

அன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தது. அண்ணன் எடப்பாடி அவர்கள் முதலமைச்சராக இருந்தார். அந்த அமைச்சரவையிலே அண்ணன் சிவி சண்முகம் சி.வி. சண்முகம் அவர்கள் அமைச்சராக இருந்தார். விழுப்புரம் மாவட்ட கலகத்தினுடைய செயலாளராக இருந்தால் அந்த தொகுதியிலே அதிமுக 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

எனவே இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்ற ஒரு சூழ்நிலை தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையிலேயே தான் இன்றைக்கு மதுராந்தகம் தொகுதியிலே பத்தாயிரம் வாக்குகளை மட்டுமே முதலாக பெற்று வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஏற்கனவே 2026 பொது தேர்தலில் அந்த இடத்திலேயே தவெக தனியாக போட்டியிட்ட பொழுது பெற்ற வாக்குகள் 62,000 இன்றைக்கு அவர்கள் பல்வேறு கட்சிகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளை இணைத்துக்கொண்டு அவர்கள் பெற்ற வாக்குகள் 72 ஆயிரம் மட்டுமே பத்தாயிரம் வாக்குகளை மட்டுமே அவர்கள் கூடுதலாக பெற்று இருக்கிறார்கள்.

எனவே இது அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி அல்ல முதலமைச்சராக இருந்த விஜய் அவர்கள் ஐந்து நிமிடம் நான் பேசினாலே கொத்து புரோட்டா போட்டு விடுவேன் என்று கொளத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார் ஐந்து நிமிடம் வந்தாலே போதும் என்றார். ஆனால் இந்த மதுராந்தகம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலேயும் இரண்டு நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் .மதுராந்தகத்தில் முதல் நாள் வந்து பேசினார் .அதன் பிறகு வந்து 40 இடங்களுக்கு மேலாக பல்வேறு இடங்களில் ரோட் ஷோ நடத்துகிறேன் என்று தெருத்தெருவாக வந்தார்.

செயற்கையான வெற்றி

ஹெலிகாப்டரில் வந்தார்.. மாட்டு வண்டியிலே வந்தார்.. ரேக்ளாவட்டிலே வந்தார்.. தென்னை மரம் விவசாயத்திலே இறங்கி டிராக்டர் ஓட்டினார்.. முருங்கை மரத்தில் ஏறித்தார்.. இன்னும் என்னென்ன ஆடு மேய்த்தார்.. மாடு மேய்த்தார்.. இப்படி பல்வேறு செயற்கையான முறையிலே செய்களை செய்து மக்களை கவர வேண்டும் என்று ஒரு செயற்கையான வெற்றியை தற்காலிக வெற்றியைத் தான் இன்றைக்கு இந்த அரசு பெற்றிருக்கிறது என்பதை இந்த நேரத்திலே நான் சொல்லிக் கொள்கிறேன்.

அதிமுகவில் எந்த பிரச்சினையும் இல்லை. பணியாற்றிக் கொண்டிருக்கின்ற மாவட்ட கழக செயலாளர் தலைமைக் கழக நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் நகர கழகத்தினுடைய செயலாளர்கள், பேரூர் கழகத்தினுடைய செயலாளர்கள் கிளைக் கழகத்துடைய செயலாளர்கள் எல்லாம் ஒற்றுமையாக இந்த இயக்கத்திலே எடப்பாடி தலைமையிலே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் நிர்வாகிகள் ஆலோசனையின் பேரில் பொதுக்குழு கூட்டத்திட்டமிடப்படும்.

எந்த தியாகத்தையும் செய்ய எடப்பாடி பழனிசாமி தயார்

தொடர்ந்து சி.வி.சண்முகம் , எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துங்கள். உங்கள் அனைவரையும் அரவணைத்து செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதிமுகவை காப்பாற்ற எந்த தியாகத்தையும் செய்ய எடப்பாடி பழனிசாமி தயாராகவே உள்ளார். உரிய நேரத்தில் பொதுக்குழுவை இபிஎஸ் கூட்டுவார். சிவி சண்முகம் உள்ளிட்டோர் கருத்துகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com