கூடலூரில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்


கூடலூரில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்
x

2-வது நாளாக கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

கூடலூர்,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தி.மு.க, அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தலுக்கு தயாராகும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக்காட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பேரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டியில் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பின்னர் மாலையில் விவசாயிகள், வணிகர்கள் என பல்வேறு தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து கூடலூர் அருகே மரப்பாலம் தனியார் ரிசார்ட்டில் எடப்பாடி பழனிசாமி இரவு தங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) 2-வது நாளாக எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். இதையொட்டி ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பதாகைகள், சுவர் விளம்பரங்கள் செய்துள்ளனர். மேலும் அ.தி.மு.க. கொடிகளை வழிநெடுகிலும் கட்டி வைத்துள்ளனர். கூடலூருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகையால் கட்சியினர் உற்சாகமடைந்து உள்ளனர். கூடலூர் நகரில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

1 More update

Next Story