எடப்பாடி பழனிசாமியின் 5-வது கட்ட பிரசார பயணம் அறிவிப்பு


எடப்பாடி பழனிசாமியின் 5-வது கட்ட  பிரசார பயணம் அறிவிப்பு
x

எடப்பாடி பழனிசாமி தனது 5-வது கட்ட பிரசார பயணத்தை வரும் 17-ம் தேதி தருமபுரியில் தொடங்க உள்ளார்.

சென்னை,

தமிழகத்​தில் 2026 சட்டசபை தேர்​தலை​யொட்டி ‘மக்களை காப்போம்... தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதிகள் தோறும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். முதல் கட்டமாக கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் தொடங்கி இதுவரை 4 கட்டங்களாக நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் அவரின் 5-ம் கட்ட பயணம் செப்.17 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்.17-இல் தருமபுரி மாவட்டம் அரூரில் தொடங்கி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இந்த சுற்றுப்பயணம் நிறைவு பெறுகிறது.

1 More update

Next Story